சின்ன ஸ்பூன்…பெரிய சாதனை ; கின்னஸ் அங்கீகாரம் பெற்ற ஈரானியர்

ரான் நாட்டைச் சேர்ந்தவர் 88 ஸ்பூன்களை விழாமல் தனது உடலில் நிற்க வைத்து, அவர் நிகழ்த்திய உலக சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை அமைப்பானது, மனிதர்கள் தனித்துவமாக அபார சாதனை படைக்கும் விஷயங்களைப் பதிவு செய்து உலகம் முழுவதும் அந்த சாதனை சென்று சேர உதவிபுரிந்து வருகிறது.

இந்த உலக சாதனைகளில் உணவு தொடர்பான சாதனைகள் பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பை பெறுகின்றன. உணவு மட்டுமின்றி, உணவுக்குப் பயன்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்தியும் மக்கள் அவ்வப்போது உலக சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், ஈரானில் ஒரு நபர் ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

ஈரானின் காரஜ் நகரைச் சேர்ந்தவர் அபோல்பாசில் மொக்தாரி. இவர் சட்டை அணியாத தனது உடலில் 88 ஸ்பூன்களை விழாமல் நிற்க வைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் கடந்த 2022-ம் ஆண்டில் 85 ஸ்பூன்களை விழாமல் உடலில் நிற்க வைத்த தனது சாதனையை தானே முறியடித்தார் மொக்தாரி.

தனது கின்னஸ் சாதனை குறித்து அவர் கூறுகையில், “எனது உடலில் இருந்து ஒருவித ஆற்றலை ஸ்பூன்களின் மீது செலுத்தி அவற்றை விழாமல் தாங்கிப் பிடித்து இந்த சாதனையைப் படைத்துள்ளேன். எனது உடலில் ஒவ்வொரு ஸ்பூனாக வைக்கப்பட்டதும், அவற்றின் மீது எனது கவனத்தைக் குவிப்பேன்.

ஸ்பூன்கள் எனது உடலில் இருப்பதை எவ்வளவுக்கு எவ்வளவு உணருகிறேனோ அவ்வளவு ஸ்பூன்களும் விழாமல் நிற்கின்றன. இதுதான் எனது சாதனை வெற்றியின் ரகசியம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here