கிழக்குக் கடலோரப் பகுதிகளுக்கு நாளை வரை தொடர் மழைக்கு வாய்ப்பு

கோலாலம்பூர்:

நாளை (டிசம்பர் 14) வரை கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) அறிவித்துள்ளது.

கிளந்தானின் தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மஞ்சுங், பாசீர் பூத்தே மற்றும் கோலாக்கிராய் ஆகிய பகுதிகள் இந்த வானிலையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பகாங்கில், குவந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் அதே வேளையில், திரெங்கானு முழுவதும் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here