ஜூலை மாதம் வரைக்குமான வாக்காளர் பட்டியல்; பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்

புத்ராஜெயா:

வ்வாண்டு ஜூலை மாதம் வரைக்குமான கூடுதல் வாக்காளர் பட்டியல் அரசாங்கப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளதால் நேற்று தொடங்கி வரும் அக்டோபர் 25ஆம் தேதி வரை அது 30 நாட்களுக்குப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று கூறியது.

கடந்த ஜூலை முதலாம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதினர் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் 38,092 பேர் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இவர்களுள் 12,360 பேர் வாக்களிக்கும் இடங்களை மாற்றிக்கொண்டுள்ள வேளையில் 1,416 பேர் தங்களின் வாக்காளர் தரத்தை மாற்றிக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஜூலை முதலாம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 18 வயது நிரம்பிய மலேசியர்களும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பம் செய்த தரப்பினரும் வாக்களிக்கும் இடத்தை மாற்றக்கோரிய தரப்பினரும் இந்தக் கூடுதல் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

https://myspr.spr.gov.my என்ற தேர்தல் ஆணையத்தின் அகப்பக்கம் வழியாகவும் தேர்தல் ஆணையத்தின் மாநில அலுவலகங்களிலும் இதனைப் பொதுமக்கள் saரிபார்க்கலாம் என்றும் அவர் சொன்னார்.
இந்தக் கூடுதல் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இடம்பெற்றிருக்காத நிலையில் மேற்குறிப்பிட்ட தரப்பினர் தேர்தல் ஆணையத்தின் சி பாரத்தைப் பூர்த்திசெய்து அதனை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தேர்தல் ஆணைய அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம் என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here