மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கிளந்தான் மற்றும் தெரெங்கானு முழுவதற்கும் தொடர் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று காலை 11.50 மணிக்கு வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட மெட்மலேசியா, இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை பகாங், ஜோகூர் மற்றும் சபாவின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கிறது.
பகாங், ரொம்பின் மற்றும் ஜோகூர் குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகள் தாக்கப்பட உள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது. சபாவில், கோத்த கினபாலு, துவாரான், ரனாவ், கோத்தா பெலுட், டெலுபிட், பெலூரான், சண்டகன் மற்றும் குடாட் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.