தொடர்மழையின் எதிரொலி; திடீர் வெள்ளத்தில் மூழ்கியது ஜோகூர்

ஜோகூர் :

நேற்று (டிசம்பர் 14) மாலை 4 மணி முதல் பெய்த கனமழையால், ஜோகூர் பாருவைச் சுற்றியுள்ள 11 இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மாலை 4.30 மணியளவில் வெள்ள நீர் பெருகியதாக தமது துறைக்கு தகவல் கிடைத்தது என்று, ஜோகூர் பாரு நகராண்மைக் கழகத்தின் (MBJB) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஜாலான் செத்தியா 10 மற்றும் ஜாலான் செத்தியா 11 ஆகிய இடங்களில் தாமான் செத்தியா இண்டா, ஜாலான் ரோஸ்மேரா, ஜாலான் முத்தியாரா எமாஸ் உத்தாமா, ஜாலான் முகமட் அமின் 7 ஆகிய இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

“இவை தவிர தாமான் மெர்டேக்காவிற்கு அருகிலுள்ள ஜாலான் டாடின் ஹலிமா, ஜாலான் ஸ்கூடாய், ஜாலான் தம்போய், கம்போங் உபி மற்றும் ஜாலான் டத்தோ சுலைமான் ஆகிய இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதால், அதில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவவும் MBJB Skuad Kilat-ஐ அனுப்பியுள்ளோம்” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here