அடுத்த 7 நாட்களின் எரிப்பொருள் விலையின் மாற்றம்

கோலாலம்பூர்: RON97 மற்றும் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் டிசம்பர் 21 முதல் 27 வரை முறையே லிட்டருக்கு RM3.47, RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும்.

புதன்கிழமை (டிசம்பர் 20) நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தானியங்கி விலை நிர்ணய பொறிமுறை (APM) சூத்திரத்தின் கீழ், பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் RON95 இன் உச்சவரம்பு விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும். இருப்பினும் இரண்டு பொருட்களின் சந்தை விலையும் தற்போதைய உச்சவரம்பைத் தாண்டி அதிகரித்திருக்கிறது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை தொடர்ந்து உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here