ஐஸ்லாந்தில் வெடித்து சிதறும் எரிமலை… அவசரமாக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!

    ஐஸ்லாந்தில் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறி வருவதால், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    உலகின் 18வது பெரிய தீவாக, வடக்கு அட்லாண்டிக் கடலில் அமைந்திருக்கிறது ஐஸ்லாந்து நாடு. இந்த நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதற தொடங்கியுள்ளது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்று இரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை கக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியுள்ளது.

    இந்த எரிமலை கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த எரிமலை கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவசரமாக வெளியேற்றப்பட்டு அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த எரிமலை வெடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக எரிமலையை சுற்றியுள்ள நகரங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here