தெலுக் இந்தான்:
பேராக்கில் வெள்ள நிலைமை முழுமையாக சீரடைந்துள்ளது, மேலும் அங்கு புதிதாக எவரும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை அத்தோடு அம்மாநிலத்தில் செயற்பட்டுவந்த ஒரே ஒரு தற்காலிகநிவாரண மையம் நேற்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.
இங்குள்ள பாடாங் தெம்பாக் பல்நோக்கு மண்டபத்தில் தங்கியிருந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்மையம் மூடப்பட்டது என்று ஹிலிர் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவரும், மாவட்ட பேரிடர் துணைத் தலைவருமான அஹ்மட் அட்னான் பஸ்ரி கூறினார்.

















