ஃபீஃபா தரவரிசையைில் தேசிய அணி நிலைத்திருக்கிறது

 

நேற்று ஃபீஃபா எனப்படும் அனைத்துலகக் கால்பந்து சம்மேளனத்தின் புதிய தரவரிசை புதுப்பிக்கப்பட்ட நிலையில் மலேசிய தேசிய அணி 130ஆவது இடத்தில் நிலைத்திருக்கிறது.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி தரவரிசயில் புதுப்பிக்கப்பட்டபோதிலும் மலேசியா 130ஆவது இடத்தில் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் மலேசிய அணி எந்த ஆட்டத்தில் களமிறங்காததால் தரவரிசயில் இந்த இடம் தொடர்கிறது.

இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி மீண்டும் இந்த தரவரிசயில் புதுப்பிக்கப்படும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2023 ஆசியா கிண்ணக் கால்பந்துப் போட்டியில் தேசிய அணி களமிறங்கவுள்ளது.

இதன்மூலம் பயிற்றுநர் கிம் பான் கோன் தலைமையிலான தேசிய அணி மீண்டும் தரவரிசயில் முன்னோக்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் வரை 137ஆவது இடத்தில் இருந்த ஹரிமாவ் மலாயா அணி 7 இடங்களுக்கு முன்னேறி 130ஆவது இடத்தை முன்னதாகப் பிடித்தது.

கடந்த மாதம் நடைபெற்ற 2026 உலகக் கிண்ணம் / 2027 ஆசியா கிண்ண தகுதிச் சுற்று டி பிரிவு 2 தொடக்கக்கட்ட ஆட்டத்தில் வெற்றியைப் பதிவுசெய்ததை அடுத்து மலேசியா அணி ஃபீஃபா தரவரிசயில் முன்னேறியது.

குறிப்பாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அணி பதிவுசெய்த சிறந்த தரவரிசயின் இடம் இதுவாகும். இதற்கு முன் 1993ஆம் ஆண்டு மலேசியா ஃபீஃபா தரவரிசயில் 75ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இதுவே தேசிய அணி வரலாற்றில் மிக உயரிய இடமாகக் கருதப்படுகின்றது. அதன்பிறகு 2006இல் 124ஆவது இடத்தில் தேசிய அணி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here