பிக் பாஸ் 7 Title Winner கைது!

பிக் பாஸ் 7 Title Winner- ராக அறிவிக்கப்பட்ட போட்டியாளரை காவல்துறை அதிரடியாக கைது செய்திருக்கிறது.

தமிழைப் போலவே, தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடந்தது. சமீபத்தில் முடிவுக்கு வந்த இந்த சீசனின் வெற்றியாளராக விவசாயம் குறித்த தகவல்களை கூறி யூடியூப் மூலம் பிரபலமான பல்லவி பிரஷாந்த் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது இடத்தை, பிரபல சீரியல் நடிகரான அமர்தீப் பெற்றார்.

இந்நிலையில் முடிவு அறிவிக்கப்பட்ட தினமான கடந்த 18ம் தேதி அமர்தீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கார் மூலம் வீட்டுக்கு சென்றபோது, பிரஷாந்தின் ரசிகர்கள் சிலர், அவரது காரை தாக்கி உடைத்தது மட்டும் இன்றி, காரை துரத்திக்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் பலர் ரசிகர்களின் இந்த செயலுக்கு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

அமர்தீப் கார் உடைக்கப்பட்டது மட்டுமின்றி அரசு பேருந்துகளின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. பிரஷாந்த் ரசிகர்கள் என சொல்லிக் கொண்ட சிலர் செய்த இந்த செயலால் தெலங்கானா காவல்துறை பிரஷாந்தை கைது செய்துள்ளனர். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள போலீசார், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளது. இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியிலும் தெலுங்கு திரையுலகிலும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here