செகாமாட், ஃபெல்டா தெனாங் அருகே குளவி கொட்டியதில் 42 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) மோட்டார் விளையாட்டு நடவடிக்கையில் பங்கேற்றபோது குளவிகளால் தாக்கப்பட்டதாக லாபிஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைத் தளபதி ஹைரிஸ்யா வாஹித் தெரிவித்தார்.
பிற்பகல் 2.24 மணிக்கு அப்பகுதியில் உள்ள ஜாலான் செமயோங் வனப் பகுதிக்கு அருகே குளவி தாக்குதல் பற்றி எங்களுக்கு அவசர அழைப்பு வந்தது. ஏழு தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.ப்பாதிக்கப்பட்டவர் அந்த இடத்திலேயே லேபிஸ் ஹெல்த் கிளினிக் சுகாதார அதிகாரியால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அவரது உடல் தேவையான நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறினார். குளவிகள் இல்லாத பகுதி என்பதை உறுதி செய்த பின்னர், தீயணைப்பு வீரர்கள் குழு மாலை 6.30 மணியளவில் சம்பவ இடத்தை விட்டு வெளியேறியனர்.








