PSB உறுப்பினர்கள் PDP கட்சியில் சேர GPS இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை

கூச்சிங்:

ரவாக் பெர்சாத்து (PSB) உறுப்பினர்கள் முற்போக்கு ஜனநாயகக் கட்சியில் (PDP) ஒன்றாக சேருவது தொடர்பில் கபுங்கான் பார்ட்டி சரவாக் (GPS) கட்சி இதுவரை எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை.

வரும் சீனப் புத்தாண்டுக்கு முன் PSB கட்சி கலைக்கப்பட உள்ளதால், PSB உறுப்பினர்கள் PDPயில் சேருவது குறித்து விவாதிப்பது தொடர்பில் தமது கூட்டணியின் எந்தக் கூட்டமும் இதுவரை நடைபெறவில்லை என்று GPS தலைவர் டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபங் கூறினார்.

வரும் சீனப் புத்தாண்டுக்கு முன் PSB கலைக்கப்படும் என்றும், அவர்களின் 80,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் PDP இல் சேருவார்கள் என்ற கருத்து தொடர்பில் கேட்டபோதே சரவாக் பிரீமியர் மற்றும் பார்ட்டி பெசாகா பூமிபுத்திரா பெர்சாத்து தலைவரான அபாங் ஜொஹாரி இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here