சிக்:
ஹுஜுங் பண்டார், லுபுக் பெசார் கிராமத்தில், தனது உறவினருடன் சேர்ந்து மரக்கிளையை வெட்டும்போது, ஒரு முறிந்த மரக்கிளை அவரது தலையில் விழுந்து அடிபட்டதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
47 வயதான உத்மான் காசிம் என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என சிக் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் அப்துல் ரசாக் ஒஸ்மான் கூறினார்.
ஆரம்பத் தகவல்களின் அடிப்படையில், மாலை 6 மணியளவில் பாதிக்கப்பட்டவரும் அவரது 42 வயது உறவினரும் மரத்தை வெட்டுவதற்காக இழுத்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“மாலை 6.40 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. உடல் மேல் நடவடிக்கைக்காக சிக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
விசாரணையில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அப்துல் ரசாக் கூறினார்.




















