கோத்தா பாரு:
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி முதல் தொடங்கிய பருவமழையின் பின்னர் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி இதுவரை கோத்தா பாருவில் ஒரு பையனும், பாசீர் மாஸில் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்துள்ளதாக கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
எனவே பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
” குறிப்பாக மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள், வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம், ஏனெனில் அவ்விடங்களில் அவர்கள் நிச்சயமாக ஆபத்தை எதிர்கொள்வார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.




















