கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் உதவி- பிரதமர் அறிவிப்பு

பாசீர் மாஸ்:

வம்பர் மாதம் முதல் தற்போதுவரை மூன்றாவது தடவையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கிளந்தான் வாசிகளுக்கு RM50 மில்லியனை உதவித்தொகையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM1,000 வழங்கப்படும் என்றும், மேலும் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் கூடுதல் உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எனவே “தற்காலிக நிவாரண மையங்கள் மற்றும் பிற பகுதிகளில் தங்கவைக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) மூலம் RM50 மில்லியன் நிதியை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் அல்லது குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம்.

“மூன்றாவது முறையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பைச் சந்தித்த குடும்பங்கள் இருப்பதாக கிளந்தான் மந்திரி பெசார் என்னிடம் கூறினார். அவர்களுக்கு, இறைவன் நாடினால் நாங்கள் கூடுதல் உதவி செய்வோம்,” என்று அவர் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here