கோலாலம்பூர்:
கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர் மற்றும் சபா ஆகிய ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (டிசம்பர் 28) நண்பகல் நிலவரப்படி 26,914 ஆகக் குறைந்துள்ளது, இது காலை 8 மணிக்கு 28,032 பேராக பதிவாகி இருந்தது.
தற்போது நாடுமுழுவதும் 131 தற்காலிக நிவாரண மையங்கள் செயற்பாட்டிலுள்ளன அத்தோடு இன்று 6 நிவாரண மையங்கள் இதுவரை மூடப்பட்டுள்ளன என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் தேசிய பேரிடர் கட்டளை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பகாங் (குவாந்தன், பெக்கான் மற்றும் ரொம்பின்) மற்றும் ஜோகூர் (சிகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு) ஆகிய இடங்களில் தொடர் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.









