பெர்லிஸ் சுங்கத்துறையினரால் 286 கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பு

பாடாங் பெசார்:

பெர்லிஸ் சுங்கத் துறை இந்த ஆண்டு இதுவரை RM5,983,463.19 மதிப்புள்ள பல்வேறு பொருட்களை உள்ளடக்கிய 286 கடத்தல் நடவடிக்கைகளை முறியடித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அதிக மதிப்புள்ளவை வாகனங்கள், அவற்றின் மொத்த மதிப்பு RM3,050,510 மற்றும் அவற்றின் மொத்த வரி மதிப்பு சுமார் RM82,710.50 என்றும், அதைத் தொடர்ந்து RM1,844.306.20 மதிப்புள்ள போதைப்பொருள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டதாக பெர்லிஸ் சுங்க இயக்குநர் இஸ்மாயில் ஹாஷிம் தெரிவித்தார்.

“கைப்பற்றப்பட்ட ஏனைய பொருட்கள் RM718,024.89 மதிப்புடையவை என்றும், அவற்றின் மொத்த வரி RM327,382.54 என்றும் அவர்கூறினார். அதேசமயம், சிகரெட்டுகள், மதுபானங்கள, பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் சமையல் எண்ணெய் என்பனவும் கைப்பற்றப்பட்டன” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (டிச. 29) பாடாங் பெசார் சுங்க அலுவலகத்தின் அமலாக்கப் பிரிவில் நடந்த ஒரு மாநாட்டின் போது கூறினார்.

2023 ஆம் ஆண்டு முழுவதும், கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின்போது இரண்டு தாய்லாந்து நாட்டவர்கள், நான்கு மியன்மார் பிரஜைகள் மற்றும் ஒரு சீன நாட்டவர் அடங்கிய சட்டவிரோத குடியேறிகளைக் கடத்தும் முயற்சிகளையும் பெர்லிஸ் சுங்கத்துறையாழ் முறியடிக்க முடிந்தது என்றும் இஸ்மாயில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here