மாலை 4 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10,900 ஆகக் குறைந்துள்ளது – நட்மா

கோலாலம்பூர்:

ன்று (டிசம்பர் 30) மாலை 4 மணி நிலவரப்படி நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, அதனடிப்படையில் 10,895 பேர் அங்குள்ள 41 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை இன்று நண்பகல் 14,388 பேராக இருந்தது.

நாட்டில் மிக அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கிளந்தான் உள்ளது. அங்குள்ள நான்கு மாவட்டங்களில் 29 நிவாரண மையங்கள் இயங்குகின்றன. இதில் 13 பாசீர் மாஸில் 2,008 குடும்பங்களைச் சேர்ந்த 6,733 பேரும், தும்பாட்டில் 1,085 குடும்பங்களைச் சேர்ந்த 3,099 பேரும், ஜெலியில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேரும், கோலாக்ராயில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரெங்கானுவில், இன்று நண்பகல் டுங்கூன் மற்றும் கோலா திரெங்கானு மாவட்டங்களில் உள்ள ஒன்பது நிவாரண மையங்களில் 181 குடும்பங்களைச் சேர்ந்த 659 பேர் அங்குள்ள ஐந்து நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில் தற்போது 97 குடும்பங்களைச் சேர்ந்த 354 பேராக குறைந்துள்ளது.

இந்நிலையில் ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் சிகாமட்டில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

பகாங்கில், 37 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here