ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி அலைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.
ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மேற்கு கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அணுமின் நிலையங்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அனைத்து கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற ஜப்பான் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
சுனாமி மீண்டும் மீண்டும் தாக்கும் என அஞ்சப்படுவதால் தொலைக்காட்சியில் தோன்றி பிரதமர் கிஷிடா அறிவுறுத்தியுள்ளார். கொந்தளிப்புடன் காணப்படும் கடல் நீர் பல இடங்களில் தாழ்வான பகுதிகளை சூழத் தொடங்கியுள்ளன.