முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் வாக்குகளை வாங்க பில்லியன் ரிங்கிட்டை பயன்படுத்தினார் – உயர்நீதிமன்றம்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், தனூர் நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்ற 681 மில்லியன் அமெரிக்க டாலர்கள், 2013 நடந்த பொதுத் தேர்தலுக்கு வாக்குகளை வாங்கப் பயன்படுத்தப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப்பணம் சிங்கப்பூர் Falcon வங்கியிலிருந்து குறித்த தொகை பெறப்பட்டு, நஜிப்பிற்கு சொந்தமான AmPrivate வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக 1MDB வழக்கு விசாரணை அதிகாரியும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த கண்காணிப்பாளருமான நூர் ஜடா அரிபின்,37 தெரிவித்தார்.

Tanore Finance Corporation என்பது எரிக் டானுக்கு சொந்தமானது, அவர் 1MDB வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் லோ டேக் ஜோவின் வர்த்தக பங்காளி ஆவார்.

குறித்த 2.28 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட நஜிப்பின் ஊழல் மற்றும் பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பில் மே 4, 2015 அன்று பணம் குறித்து புகார் அளிக்கப்பட்டது என்றும், MACC சட்டம் 2009ன் பிரிவு 16ன் படி விசாரணை நடத்தப்பட்டது என்று நூர் ஐடா கூறினார்.

“1MDB ஆலோசனை குழுவின் தலைவராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த நஜிப், தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மொத்தம் RM3.2 பில்லியன் நிதியை 1MDBயில் இருந்து பெற்றுள்ளார்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here