25 வயது இளைஞனை கொலை செய்ததாக சகோதரர்களான ஜெகதீஷ்ராஜ், வசந்தராஜ் மீது குற்றச்சாட்டு

25 வயது இளைஞனைக் கொன்றதாக இரண்டு சகோதரர்கள் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  ஜாலான் ட்ரஸ் மற்றும் ஜாலான் உங்கு புவான் சந்திப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி அதிகாலை 1.08 மணியளவில் நடந்த சண்டையில், பி.ஜெகதீஷ்ராஜ் 20, மற்றும் பி.வசந்தராஜ் 21, ஆகியோர் முஹம்மது சயாபிக் அப்துல் லத்தீப்பைக் கொன்றனர். தலைமறைவாக உள்ள மேலும் மூவருடன் அவர்கள் இந்த குற்றத்தை செய்ததாக கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இது மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்  12 பிரம்படிகளுக்கு குறையாத தண்டனை வழங்கப்படும். உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கொலை வழக்கு என்பதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் ஜாமீனும் வழங்கப்படவில்லை. மாஜிஸ்திரேட் நூருல் ஃபராஹா முகமட் சுவா பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க மார்ச் 6 ஆம் தேதியை நிர்ணயித்தார். அரசு துணை வழக்கறிஞர் ஆர்.நவீனா வழக்கு தொடர்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here