(க.கலை)
போர்ட்டிக்சன், ஜன. 4-
புத்தாண்டை முன்னிட்டு 4 X 4 ஜீப் வாகனப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்த வாகனப் போட்டியை காண்பதற்கு பல ஆயிரம் மக்கள் திரண்டு மகிழ்ச்சியுடன் தங்களின் ஆதரவை வழங்கினர்.
கிம்மாஸ் கெமெஞ்சே போலீஸ் நிலையம் அருகில் பெர்சத்துவான் சோஷியல் தமிழ் நெகிரி செம்பிலான் ஏற்பாட்டில் 4 X 4 ஜீப் வாகனம் போட்டியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ப.குணசேகரன் பரிசுகளை வழங்கினார். பரிசு வழங்குவதற்கு முன் ப.குணசேகரன் உரையாற்றினார்.
அப்போது பெர்சத்துவான் சோஷியல் தமிழ் நெகிரி செம்பிலான் தலைவர் ஏழுமலை சின்னையாவின் ஏற்பாட்டுக் குழு சார்பில் இந்த 4 X 4 நான்கு சக்கர ஜீப் வாகனப் போட்டி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முதல் முறையாக நடைபெறுகிறது.
இது உண்மையில் மகிழ்ச்சியான செயல் என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஏழுமலை சின்னையா, அவரின் ஏற்பாட்டுக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
மேலும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இதுபோன்ற 4 X 4 நான்கு வண்டி சக்கர ஜீப் வாகனப் போட்டியை நடத்துவதற்கு இடம் இல்லை. இதற்கு மாநில அரசாங்கம் ஓர் இடத்தை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும். விரைவில் நெகிரி மாநில மந்திரி பெசாரை சந்தித்து 4ஙீ4 ஜீப் வாகன பயிற்சிக்கு இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்படும் என்றும் ப.குணசேகரன் குறிப்பிட்டார்.
தம்பின் இளைஞர் விளையாட்டு இலாகா, தம்பின் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், ரேலா, மாவட்ட பொதுப்பணி இலாகா அதிகாரிகள், மாவட்ட தகவல் இலாகா அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.