சுரங்கம் இடிந்து விழுந்ததில்ஆடவர் பலி, அவரது நண்பர் காயம்

கோலா லங்காட்:

ந்திங்கிலுள்ள பண்டார் சௌஜானா புத்ரா என்ற இடத்தில் உள்ள சுரங்கத் தளப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார், அவரது நண்பர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை 4.32 மணியளவில் அவரது துறைக்கு தகவல் கிடைத்தது என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர், வான் முகமட் ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

“உடனே சம்பவ இடத் திற்கு அனுப்ப ப்பட்ட குழு, குவாரி தளத்தில் 1.2 மீட்டர் ஆழத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை கண்டறி ந்தது, மேலும் அதில் 30 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் பாதிக்கப் பட்டதாகவும்,தீயணைப்பு படை வருவதற்கு முன்பே பாதிக்கப்பட்ட ஒருவரை பொதுமக்கள் வெற்றிகரமாக மீட்டு சிகிச்சைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,” என்று அவர் கூறினார்.

மற்றையவர் சுமார் இரண்டு மணிநேரம் தேடுதலுக்குப் பிறகு மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டார் , ஆனால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here