தங்கத்தை நோக்கி முதல் கட்ட பயிற்சி 50 மாணவர்கள் பங்கேற்பு

கே. ஆர். மூர்த்தி

கூலிம், . 5-

தங்கப் பதக்கத்தைக் குறிவைக்கும் முதல் கட்ட பயிற்சியில் 50 மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் பயிற்சியினை வெற்றிகரமாக முடித்ததாக கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் எஸ். ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த 2023 ஆண்டு கெடா மாநில கராத்தே கழகம்,பேராக் மாநில கராத்தே கழகம், பினாங்கு மாநில ஓகினோவா கோஜூ ரியோ கராத்தே கழகம்,  மலேசியா ஓகினோவா கோஜூ ரியோ கராத்தே கழகம் ஒன்றிணைந்து தங்கப் பதக்கத்தை நோக்கி (கீணிச்ஞீ கூணி எணிடூஞீ) திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தின.

வளர்ந்து வரும் நம் இந்திய சமுதாயத்தினிடையே கராத்தே கலையை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இன்னும் அதிகமான போட்டியாளர்களை இக்கழகத்தின் வாயிலாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் வட மாநிலத்தில் அமைந்துள்ள கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் அந்த அந்த மாவட்டங்களில் மாணவர்கள் தேர்வும் அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் தொடக்கமாக நேற்று முன் தினம் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள சிம்பாங் அம்பாட்டில் அமைந்துள்ள பினாங்கு மாநில ஓகினோவா கோஜூ ரியோ கராத்தே கழக மையத்தில் முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் கலந்துகொண்ட 50 போட்டியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைமை பயிற்றுநர் மாஸ்டர் கோஷி ப. தியாகராஜன்,  மாஸ்டர் கோஷி விஜேய் மற்றும் சியான் இராமன் ஆகிய மூவரும் பயிற்சியினை வழங்கினர்.

மாணவர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அனைவரும் திறன்பட போட்டியில் கலந்துகொண்டனர்.

 கெடா மாநில கராத்தே கழகத்தின் உதவித்தலைவர் கேப்டன் பரகுரு பாலன் மாணவர்களுக்கு தன்முனைப்பு உரையை வழங்கி உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் நற்சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சிக்கு சிறப்பு வருகையாளராக கெடா மாநில கராத்தே கழகத்தின் துணைத்தலைவர் டத்தோ முனியாண்டி கலந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here