நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,366 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்:

ஜோகூர் மற்றும் பகாங் மாநிலங்களில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சிஏற்பட்டுள்ளது, இன்று காலை 6 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் உள்ள 73 நிவாரண மையங்களில் மொத்தம் 8,366 பேர் தங்கியுள்ளனர், இந்த எண்ணிக்கை நேற்றிரவு 8,566 பேராக பதிவாகியிருந்தது.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (NADMA) தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள நாட்டின் பேரிடர் நிலை குறித்த சமீபத்திய அறிக்கையின்படி, ஜோகூரில் மொத்தம் 7,324 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தா திங்கி மாவட்டத்தில் அதிகபட்சமாக 26 நிவாரண மையங்களில் 4,707 பேர் தங்கியுள்ளனர், அதனைத்தொடர்ந்து குளுவாங்கிலுள்ள 13 நிவாரண மையங்களில் 1,601 பேரும், ஜோகூர் பாருவிலுள்ள  5 நிவாரண மையங்களில் 840 பேரும், சிகாமாட்டிலுள்ள 3 நிவாரண மையங்களில் 73 பேரும் , கூலாயிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 86 பேரும் , பொந்தியானிலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 17 பெரும் என  மொத்தம் 4,707 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பகாங்கில், நேற்றிரவு 27 நிவாரண மையங்களில் தங்கியிருந்த 1,222 பேருடன் ஒப்பிடும்போது, அங்குள்ள மூன்று மாவட்டங்களில் இயங்கிவரும் 22 நிவாரண மையங்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,042 ஆகக் குறைந்துள்ளது.

பெக்கானில் செயற்பாட்டிலுள்ள 8 நிவாரண மையங்களில் 360 பேரும், மாரான் மற்றும் ரொம்பின் ஆகிய இரு மாவட்டங்களிலும் தலா7 நிவாரண மையங்களில் 341 பேர் தங்கியுள்ளனர். 

மேலும் சரவாக்கின் கூச்சிங்கில், தீ விபத்தில் தமது வீடுகளை இழந்துள்ள 38 பேர் தங்குவதற்கு ஒரு நிவாரண மையம் திறக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here