இன்றளவும் தேசிய முன்னணிக்கே எங்கள் ஆதரவு; myPPP உறுதி

பல இன்னல்களை சந்தித்து வந்த myPPP தற்பொழுது நல்ல முறையில் அதன் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்பொழுது அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து கட்சியை வளர்க்க வேண்டும் என்று myPPP தேசியத் தலைவர் டத்தோ லோகா பாலா மோகன் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் myPPP 2019ஆம் ஆண்டு அதன் பதிவு ரத்து செய்யப்பட்டு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி மீண்டும் மீட்டெக்கப்பட்டது. நாங்கள் இன்றளவும் எங்களின் ஆதரவினை தேசிய முன்னணிக்கே வழங்கி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். பல்லின மக்களை கொண்ட myPPPஇன் ஆதரவு தேசிய முன்னணிக்கு வழங்கி வருவதாகவும் ஆனால் எங்களின் நிலை குறித்து தேசிய முன்னணியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

myPPP தற்பொழுது அனைவருக்குமான கல்வி என்ற குறிக்கோளை அடைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஏனெனில் கல்வி மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு பெரிய மாற்றத்திற்கான திறவுகோல் கல்வி என்றும் அவர் கருத்துரைத்தார்.

இன்று myPPP தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைகான பாரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்  டத்தோ ஶ்ரீ Daljit singh, இந்திரஜித் சிங் மற்றும் விலாயா மாநிலத் தலைவரும் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் சத்யா சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here