கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர், நேற்று பிற்பகல் கெம்பரா கெனாலி போர்னியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது மக்கள் காட்டிய உற்சாகத்தைக் கண்டு மெய்சிலிர்த்தனர்.
சுற்றுப்பயணத்தின் போது தங்களை வாழ்த்த வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பேரரசர் தம்பதியினர் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர் என்று, இஸ்தானா நெகாராவின் அரச குடும்பத்தின் முத்திரைக் காப்பாளர் டத்தோ பெங்கலோலா மெஜ் ஜென் டத்தோ சஹாரி முகமட் அரிஃபின் குறிப்பிடுள்ளார்.
சபாவிற்கும் சரவாக்கிற்க்கும் பயணம் செய்யும் கனவை நனவாக்கிய இந்தப் பயணத்தின் முதல் நாளிலே மக்கள் காட்டிய அன்பு அவர்களின் மனதை ஆழமாகத் தொட்டது என்றும், தவாவில் தொடங்கி தெலுக் மெலனோ, கூச்சிங் சரவாக்கில் இம்மாதம் 13 ஆம் திகதி இவர்களின் பயணம் முடிவேறும் என்றும் ஓர் அறிக்கையின் வழி அவர் குறிப்பிட்டுள்ளார்.




















