இந்த உலகம் இப்படி அழியும்.. அப்படி அழியும் எனப் பல கருத்துகள் இணையத்தில் உலா வருகிறது. இதை வைத்து எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களும் என்றும் பயங்கர ஹிட் தான். ஆனால், உலகம் எப்படி அழியும் என்பது குறித்து யாருக்கும் துல்லியமாகத் தெரியாது.
இதற்கிடையே உலகம் எப்படி முடிவுக்கு வரலாம் என்பது குறித்து புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் ஒரு வியக்க வைக்கும் மாற்றம் நடைபெறும் என்பதை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்,
இருப்பினும், இந்த ஆக்ஸிஜன் நிறைந்த காலம் பூமியில் எப்போதும் நிரந்தர அம்சமாக இருக்காது என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அடுத்த பில்லியன் ஆண்டுகளில் ஆக்சிஜன் குறைப்பு நிகழ்வு (deoxygenation) ஏற்படலாம், இது மீத்தேன் ஆதிக்கம் செலுத்தும் வளிமண்டலத்திற்கு வழிவகுக்கும், இது சுமார் 2500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகம் இருந்த ஆர்க்கியன் பூமியைப் போன்ற நிலையை ஏற்படுத்தும்.
ஆக்சிஜன் குறையும்: இந்த மாற்றம் மனித நாகரீகம் உட்பட ஆக்சிஜனைச் சார்ந்த வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் முற்றுப்புள்ளியை வைக்கும். சூரியனின் அதிகரித்து வரும் ஒளிர்வு மற்றும் வாயுவக்களை பிளக்கும் அதிக வெப்பம் ஆகியவை காரணமாக கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கணிசமாகக் குறைகிறது. இந்த CO2 குறையும் போது ஒளிச்சேர்க்கை குறையும். இதனால் ஆக்சிஜன் உற்பத்தியும் கூட மிகக் கடுமையாகக் குறையும்.
இதற்கு முன்பு அதிகரிக்கும் சூரியக் கதிர்வீச்சு பூமியின் கடல்களை சுமார் 2 பில்லியன் ஆண்டுகளில் ஆவியாகிவிடும் என்று கூறியது. ஆனால் இந்த புதிய ஆய்வில் ஆக்சிஜன் குறைவு நிகழ்வு என்பது கடல் நீர் ஆவி ஆவதற்கு முன்பே நடக்கும் என்றும் அது பூமியில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மனிதர்கள் அழிவர்: இது மிக மோசமான பிரச்சினை என்று ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ஆய்வாளர் கிறிஸ் ரெய்ன்ஹார்ட் எச்சரிக்கிறார். இந்த நிகழ்வு மட்டும் ஏற்பட்டால் பூமியில் இருக்கும் ஆக்சிஜன் அளவு தற்போதுள்ளதை காட்டிலும் பல மடங்கு குறைந்துவிடும். அதுபோன்ற நிலை ஏற்பட்டால் மனிதர்கள் போன்ற ஏரோபிக் உயிரினங்களால் பூமியில் வாழவே முடியாது. இது தற்போது பூமியில் வாழும் பெரும்பாலான உயிரினங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
இந்த ஆய்வு ஏலியன் குறித்த ஆய்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும்.ய பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் ஏலியன்கள் வாழ்ந்து வருகிறதா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தொலைதூரங்களில் உள்ள கிரகங்களில் ஆக்சிஜன் இருக்கிறதா என்பதையே நாம் கண்டுபிடிக்க முயல்கிறோம். ஆனால், இந்த ஆய்வு என்பது ஆக்சிஜன் அளவு என்பது எப்போதும் நிலையாக இருக்காது என்பதைக் காட்டுகிறது.