உயிரியல் பூங்கா பாதுகாப்பு திட்டத்திற்காக நன்கொடையாக RM6,800 திரட்டியுள்ள மாணவர்கள்

பெட்டாலிங் ஜெயா:

கெபாங்சான் மலேசியா பல்கலைக்கழக மாணவர்கள் “Zoo Keeper for a Day” என்ற தேசிய உயிரியல் பூங்கா பாதுகாப்பு திட்டத்தின் மூலம் RM6,800 நன்கொடையாக திரட்டியுள்ளனர்.

உயிரியல் பூங்காவில் உள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அதே நேரத்தில் இந்தப் பணம் உணவு, மருத்துவம் மற்றும் பிற செலவுகளுக்கும் பங்களிப்பு செய்யும் என்று மாணவர் அணியின் தலைவர் ஆங் யுவே கூறினார்.

பல்லுயிர் பெருக்கம், வனவிலங்கு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த பிப்ரவரி 3 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்வுகளின் மூலம் இந்த நன்கொடை திரடடப்பட்ட்து என்று அவர் கூறினார்.

“எங்கள் முதுகலை வணிக நிர்வாக கல்வியிலிருந்து பெற்ற அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவதற்கு, எங்கள் இறுதியாண்டு திட்டத்தை கார்ப்பரேட் சமூகப் பொறுப்பில் கவனம் செலுத்தத் தேர்ந்தெடுத்தோம் என்று கூறிய ஆங் யுவே, திட்ட மேலாண்மை திறன்களை வெளிப்படுத்துதல், குழு உறுப்பினர்களிடையே பணிகளை திறம்பட ஒப்படைத்தல், செலவுகளைக் கட்டுப்படுத்துதல், விலங்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு சமூக ஊடக தளங்களை மேம்படுத்துதல் மற்றும் கார்ப்பரேட் மற்றும் பொது நிறுவனங்களை ஆதரவில் ஈடுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் என்றார் .”

பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர், இது மிருகக்காட்சிசாலைக்காரர்களால் மேற்கொள்ளப்படும் தினசரி பொறுப்புகளை அனுபவிக்க அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here