காற்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது குடிநுழைவுத் துறை அதிரடி சோதனை ; 13 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலா திரெங்கானு:

கடந்த வெள்ளிக்கிழமை கோலா நெருஸில் உள்ள டோக் ஜெம்பல் காற்பந்து மைதானத்தில் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்த 13 சட்டவிரோத குடியேறிகளை திரெங்கானு குடிநுழைவுத் துறை கைது செய்தது.

மாலை 5.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் 20 முதல் 55 வயதுடைய 10 மியன்மார் பிரஜைகள் மற்றும் மூன்று வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டதாக மாநில குடிநுழைவு துறை இயக்குனர், அசார் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.

“கால்பந்து மைதானத்தில் மொத்தம் 59 வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டதாகவும் அதில் 13 பேர் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாததற்காக குடிவரவுச் சட்டம் 1959/63 (திருத்தப்பட்ட 2002) பிரிவு 6(1)(c) இன் கீழ் கைது செய்யப்பட்டனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here