நாடு முழுவதும் உள்ள அறுபது சிறைச்சாலைகளில் அதன் கொள்ளளவைவிட கைதிகள் அதிகமாக உள்ளனர்

கோல சிலாங்கூர்:

நாடு முழுவதும் உள்ள அறுபது சிறைகளில் தற்போது சுமார் 75,000 கைதிகள் உள்ளனர், இது ஆகக்கூடுதலாக 71,000 கைதிகள் என்ற உச்ச வரம்பை மீறுகிறது.

அத்தோடு சிறைச்சாலைகளில் 5.6 சதவீதத்தை தாண்டிய கைதிகளின் எண்ணிக்கை உள்ளது என்றும், சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலை இது குறிக்கிறது என்று சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ நோர்டின் முகமட் கூறினார்.

“குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதில் மலேசிய சிறைத்துறையின் தற்போதைய வெற்றி விகிதம் 82.4 சதவீதமாக உள்ளது, அதாவது அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, இந்தக் குழு மூன்று வருட காலத்திற்குள் மீண்டும் அக் குற்றத்தில் ஈடுபடாது.”

புஞ்சக் ஆலாம் சீர்திருத்த மையத்திற்கு நேற்று விஜயம் செய்த சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷாவிடம் விளக்கமளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, தெங்கு அமீர் ஷா மையத்தின் ஒருமைப்பாடு பள்ளியில் வகுப்புகளுக்குச் சென்று, கைதிகளின் இசை நாடக நிகழ்ச்சியைப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here