கடப்பிதழில் உள்ள தகவல்களை மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் 27 வங்காளதேச தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர்:

தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் (RTK 2.0) பதிவு செய்யும் போது, தங்கள் கடப்பிதழில் உள்ள தகவல்களை மாற்ற முயன்ற வெளிநாட்டவர் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக, குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

குறித்த வெளிநாட்டு தொழிலாளர்களின் முதலாளியின் பிரதிநிதி என நம்பப்படும் உள்ளூர் பெண் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், என்றார்.

அவரது கூற்றுப்படி, கடந்த திங்கள்கிழமை (ஜனவரி 15) காலை ஜாலான் டூத்தாவில் உள்ள உள்துறை அமைச்சக வளாகத்தில் உள்ள கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்தது.

“RTK 2.0 க்கு பதிவு செய்வதற்காக ஒரு பெண்ணுடன் இருபத்தேழு வங்களாதேச ஆண்கள் வந்தனர், அவர்கள் அனைவரும் பாஸ்போர்ட்டில் தகவல்களை மாற்றியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்றார்.

“MyIMMS ஐப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் அடிப்படையில் , இந்த வங்காளதேச ஆண்களின் பாஸ்போர்ட் பயோடேட்டா பக்கங்களில் பழைய பாஸ்போர்ட் எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் நேற்று ( ஜனவரி 16) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் குடிநுழைவு சட்டம் 1959/63 இன் பிரிவு 56(1A)(a) இன் கீழ் குற்றம் செய்ததாக 39 வயதான உள்ளூர் பெண்ணை கைது செய்ததாக ரஸ்லின் கூறினார்.

அதேநேரம் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட வங்காளதேச ஆண்களும், செல்லுபடியாகும் அதிகாரம் இல்லாமல் பயண ஆவணங்களைத் திருத்தியதாகக் கூறி அதே சட்டத்தின் 56(1)(எல்) பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

RTK 2.0 திட்டத்திற்காக சட்டவிரோதமாக குடியேறியவர்களை பதிவு செய்த அனைத்து முதலாளிகளும் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க உடனடியாக KL குடிவரவுத் துறைக்குச் செல்லுமாறு ரஸ்லின் அழைப்பு விடுத்தார்.

RTK 2.0 மார்ச் 31 அன்று காலாவதியாகிறது என்பது நினைவு கூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here