ஜோகூர் மற்றும் பகாங்கில் சனிக்கிழமை வரை தொடர் மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர்:

பகாங் மற்றும் ஜோகூரில் வரும் சனிக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பகாங்கில் குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் ஜோகூரின் குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் இந்த வானிலை மிகவும் என அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

மேலும், சரவாக்கில் கூச்சிங், செரியான், சமரஹான், ஸ்ரீ அமான், பெத்தாங், சரிகேய், சிபு மற்றும் மூக்கா ஆகிய பகுதிகளிலும் நாளை வரை இந்த தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here