கோத்தா கினாபாலு:
இன்று (ஜனவரி 19) ஜாலான் பெனாம்பாங்-தம்புனான் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள ஆறு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. எனினும் அதிஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கம்போங் டிம்போலூன் பாபாகோனில் நடந்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்தது,உடனே பெனாம்பாங் மற்றும் கோத்தா கினாபாலு தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.
இரவு 7.24 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என தீயணைப்பு துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சண்டக்கான் மாவட்டத்தில் நடந்த மற்றுமொரு தீ விபத்தில், நகர மையத்தில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஜாலான் ஓல்ட் ஸ்லிப்வேயில் அமைந்துள்ள குறித்த வளாகம் 85 விழுக்காடு அழிக்கப்பட்டதுடன், அங்கிருந்த எட்டு மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்தன.
“எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மாலை 6.18 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, இரவு 7.15 மணிக்கு நடவடிக்கை முடிவுக்கு வந்தது,” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.