பத்து மலையில் இந்த ஆண்டு எஸ்கலேட்டர் கட்டப்படும்

கோம்பாக்: ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலுக்குச் செல்ல 272 படிகளை உள்ளடக்கிய பத்து மலையில் இந்த ஆண்டு எஸ்கலேட்டர் (மின்சார படிக்கட்டு) கட்டப்படும். இத்திட்டத்தை நிறைவேற்ற கோயிலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என ஆலயத்  தலைவர் ஆர்.நடராஜா நம்பிக்கை தெரிவித்தார். (அரசு) எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் இந்த ஆண்டு (மாற்றுத்திறனாளிகள்) மற்றும் முதியவர்கள், படிகளில் ஏற முடியாத (பிரதான கோவிலுக்கு) எஸ்கலேட்டர் அமைக்க உள்ளோம் என்று நடராஜா மனித வளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம்முடனான  ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தற்போது, ​​பத்து மலையில் புகழ்பெற்ற கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் 272 படிகள் கொண்ட வண்ணமயமான படிக்கட்டுகளில் ஏற வேண்டும். கடந்த ஆண்டு பராமரிப்பு நோக்கங்களுக்காக கோயிலுக்கு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியதற்காக முன்னாள் மனிதவளத் துறை அமைச்சரும் பத்து காஜா  வி சிவகுமாருக்கும் நடராஜா நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here