பத்துமலை வருடாந்திர தைப்பூம்; 290 கடைகளுக்கு அனுமதி

கோம்பாக்:

த்துமலையிலுள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள வருடாந்திர தைப்பூச திருவிழாவின் போது, ஜனவரி 23 முதல் 26 வரை சுமார் 290 கடைகள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட 236 கடைககளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகரித்துள்ளது என்று செலாயாங் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உணவு மற்றும் குளிர்பானக் கடைகள் அதிகபட்சமாக 128 ஆகவும், அதைத் தொடர்ந்து மருதாணி பெயிண்டிங் சேவைகள் 47 கடைகளும் உள்ளன.

மேலும் 51 மொட்டை போடுதல் மற்றும் பச்சை குத்துதல் சேவைகளை வழங்கும் கடைகளும், 19 மலர் மாலைகளை விற்பனை செய்யும் கடைகளும் உள்ளன.

இவைதவிர 15 கடைகள் மாற்றுத்திறனாளி வர்த்தகர்களுக்காகவும், 22 கடைகள் இலாப நோக்கற்ற குழுக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த கடைகளுக்கான ஒதுக்கீடு தொடர்பான அமர்வு நேற்று தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள டேவான் பெரிங்கினில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here