தங்கள் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை சமூக ஊடகங்களில் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது குறித்து பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புக்கிட் அமான் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் விசாரணைப் பிரிவு (D11) முதன்மை உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹாசன், புகைப்படங்கள் மற்றும் இடங்களைப் பகிர்வது பாலியல் குற்றங்கள் இழைக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கருத்துரைத்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது. ஆன்லைனில் இதுபோன்ற விரிவான தகவல்கள் பாலியல் குற்றவாளிகளை, குறிப்பாக சிறுபிள்ளைகளை குற்றச் செயல்களைத் திட்டமிடுவதற்கு வழி வகுக்கும் என்று அவர் கூறினார்.
இன்று பெர்னாமா டிவி நிகழ்ச்சியான Apa Khabar Malaysia today விருந்தினராக கலந்து கொண்ட அவர், ஒரே புகைப்படத்தின் தாக்கம் பாலியல் மிரட்டல் போன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் எதையும் இடுகையிடும்போது கவனமாக இருங்கள்.
12 மற்றும் 13 வயதுடையவர்கள் போன்ற பதின்ம வயதிற்குள் நுழைபவர்கள், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி (அவர்கள் சரியாகக் கண்காணிக்கப்படாவிட்டால்) இந்தக் குற்றவாளிகளைச் சந்திக்கலாம். இது பலாத்காரம் அல்லது பாலியல் துஷ்பிரயோக வழக்குகளுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் சமூக ஊடகங்களில் ஒரு இடுகையில் தொடங்கலாம்.
சமூக ஊடகங்களில் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சித்தி கம்சியா கூறினார். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இதனால் அவர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ள மிகவும் நம்பகமான நபர்களாக மாற வேண்டும்.
பதின்ம வயதினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பங்கேற்பதற்குத் தயாராக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் பெடோஃபில்களால் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் “தூண்டப்படுவார்கள்” என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். போலீஸ் புள்ளி விவரங்களின் அடிப்படையில், சிட்டி கம்சியா, பாலியல் குற்றங்கள் கடந்த ஆண்டு 9.6% ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 15% அதிகரித்துள்ளது.









