பிரிட்டிஷ் தம்பதியிடம் லஞ்சம் வாங்கியதாக மூன்று போக்குவரத்து காவல்துறையினர் கைது

ஈப்போ:

அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக வழங்கப்பட்ட சம்மனை சமரசம் செய்வதற்காக போக்குவரத்த்து போலீஸ்காரர் ஒருவர் RM100 லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டி, பிரித்தானிய தம்பதியினர் ஆன்லைனில் வெளியிட்ட வைரலான வீடியோ தொடர்பாக மூன்று போக்குவரத்து போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநில போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 37 முதல் 42 வயதுக்குட்பட்ட மூவரும் விசாரணையில் உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 384வது பிரிவின் கீழ் அவர்கள் மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) முதல் மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 இன் பிரிவு 17 (a) மற்றும் மல்டிமீடியா மற்றும் தகவல் தொடர்புச் சட்டம் 1988 இன் பிரிவு 233 இன் படியும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here