லாஹாட் டத்து:
கம்போங் தபானக்கில் ஆற்றில் குளித்த இரண்டு சிறுவர்கள் இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
11 வயதான நூர் நௌஃபல் இக்பால் முகமட் நிஜாம், லஹாட் டத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் 11 வயதான முஹமட் ஜூக்ரம் ஜுல்மசல்லேஹ், இன்று காலை 11.30 மணியளவில் அவரது மூத்த சகோதரரால் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை 4.39 மணியளவில், தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் டத்து சும்சோவா ரஷித் தெரிவித்தார்.
உடனே ஒரு மீட்பு படகு உட்பட மூன்று இயந்திரங்களுடன் மொத்தம் எட்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
ஆற்றில் குளித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அங்கு வந்த தீயணைப்புப் பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.









