CNY முன்னிட்டு CIQ BSI & KSAB ஆகியவற்றின் அனைத்து முகப்பிடங்களும் இயங்கும்; ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர்

ஜோகூர் சுங்கம், குடிவரவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகம் (CIQ) சுல்தான் இஸ்கந்தர் கட்டிட வளாகம் (KSAB) மற்றும் சுல்தான் இஸ்கந்தர் கட்டிட வளாகம் (BSI)  ஆகியவற்றின் கட்டுப்பாட்டு முகமைகள் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் முழுவதும் முழுமையாக செயல்படும்.

ஜோகூர் மாநில மலேசிய குடிநுழைவு இயக்குனர் பஹாருடின் தாஹிர் கூறுகையில், ஒரு நாளைக்கு 200,000 க்கும் அதிகமான பயணிகள் நாட்டிற்குள் நுழைவார்கள் என்று அவரது தரப்பு எதிர்பார்க்கிறது. இரு பகுதிகளிலும் லோரிகள் உட்பட வாகனங்கள் செல்லும் அனைத்து வகைகளிலும் மொத்தம் 453 முகப்பிடங்கள்  முழுமையாக இயங்கும்.

கூடுதலாக, JIM ஜோகூர் அதிகாரிகள் மீது விடுப்புக் கட்டுப்பாட்டை விதிக்கிறது. அங்கு CNY கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. அதாவது மற்ற அதிகாரிகளுக்கு விடுப்பு அனுமதிக்கப்படவில்லை.  இதன் மூலம் நாங்கள் முழு விகிதத்தில் செயல்பட முடியும் என்று   பஹாருடின் தாஹிர் கூறினார்.

கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு சோதனைகள் மீதான கட்டுப்பாடுகள் சீன புத்தாண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து பயணிகளும் தங்களது பயணத்தை நன்கு திட்டமிடவும், போக்குவரத்து ஓட்டம் குறித்த சமீபத்திய தகவல்களைப் பெற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவும் அவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, KSAB மற்றும் BSI இல் கடந்த ஆண்டு ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாள் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து மொத்தம் 348,693 பயணிகளை JIM பதிவு செய்தது என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here