மஞ்சுங்:
ஆயிர் தாவார், கம்போங் பாருவில் உள்ள ஒரு கடை நேற்றிரவு தீப்பிடித்ததில், படுத்த படுக்கையாக இருந்த ஒரு முதியவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் லூ லெங் வியோன், 90 என அடையாளம் காணப்பட்டார்.
சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, தீயணைப்பு வீரர்களால் குறித்த முதியவர் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் துணை இயக்குநர் (செயல்பாட்டு பிரிவு) சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.
இரவு 11.41 மணியளவில் சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்தது என்றும், தீ இரண்டு மாடிக் கடையை சேதப்படுத்தியதுடன் தீயினால் குறித்த கட்டிடம் 70 விழுக்காடு சேதமடைந்தது.
“இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.









