மலாய்க்காரர் அல்லாதவர்கள் பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் இணைய வேண்டும் என்று பிரதமர் விருப்பம்

கோலாலம்பூர்: பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டில் சீன மற்றும் இந்திய சமூகத்தினர் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியாவின் Chinese Chambers of Commerce and Industry of Malaysia’s  (ACCCIM) சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது  உரையாற்றிய அன்வார்,  விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் அரசாங்கத்தின் அணுகுமுறை முந்தைய ஆண்டுகளை விட உள்ளடக்கியதாக இருக்கும் என்றார்.

சீன மற்றும் இந்திய சமூகங்களின் பங்கேற்பை நாங்கள் விரும்புகிறோம். மேலும் ACCCIM (விஷயத்தை) விவாதிக்க தயாராக இருப்பதாக நம்புகிறேன். ஏனெனில், பூமிபுத்ரா பொருளாதாரத்தைப் பற்றி பேசும்போது, ​​சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME) அல்லது இந்திய சமூகத்தில் உள்ள ஏழைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முழுவதுமாக தீர்க்கப்படும் என்று நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வர் கூறினார்.

பிப்ரவரி 29 முதல் மார்ச் 2 வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மலாய், கடசாண்டுசுன், தயாக், இபான் மற்றும் ஒராங் அஸ்லி ஆகிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கல்வி மற்றும் மனித மூலதன சீர்திருத்தங்கள், ஹலால் தொழில்துறையை வலுப்படுத்துதல், சபா மற்றும் சரவாக்கின் பூமிபுத்ரா பொருளாதாரம் மற்றும் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 முக்கிய விஷயங்களில் இது கவனம் செலுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here