கோலாலம்பூர்:
மிர்சான் மகாதீரின் சொத்துக்களை அறிவிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மேலும் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
இந்த விஷயத்தை MACC தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் கோரிக்கைக்குனமைவாக, இந்த கால நீட்டிப்பு அவகாசம் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
கடந்த மாதம், MACC சட்டம் 2009 இன் பிரிவு 36(1)(b) இன் படி, மிர்சான் மகாதீர் தனது சொத்துக்களை அறிவுக்க வேண்டும் என்று, MACC ஒரு அறிவிப்பு உத்தரவை பிறப்பித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




















