பா.ஜ.க. மதவாதத்தை பரப்பியதால் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு: கமல்ஹாசன்

தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வாய்ப்பினை பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அந்த கூட்டணியில் சேர்ந்தது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- தொடக்கத்தில் நற்பணி மன்றம் மூலம் மட்டும் சமூக சேவை செய்தால் போதும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் எனக்கும் அரசியல் மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தது. ஆனால் நல்ல முயற்சிகளை அரசியல் மூலமே செய்ய முடியும் என்பதை உணர்ந்ததால் அரசியலுக்கு வந்தேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தனித்துவமாக நடத்துவதாக சொல்லிவிட்டு தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து விட்டதாக என்னை விமர்சிக்கிறார்கள். அதை பற்றி கவலையில்லை. இதற்கு முன்பு கூட பல்வேறு மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் ஓரணியில் இணைந்து இருக்கிறார்கள். தற்போதைய சூழ்நிலை யில் நாட்டில் ஒரு சக்தி மக்களை பிளவுப்படுத்த நினைக்கிறது. அதுவும் மனி தர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் கடப்பா ரையை வைத்து குத்தி பிளவு ஏற்படுத்துகின்றனர்.

எனவேதான் அதற்கு எதிராக செயல்பட வேண் டும் என்ற முடிவுடன் நான் தி.மு.க. கூட்டணியில் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன் நான் நினைத்திருந்தால் தொகுதி பங்கீடு நடந்தபோது 3 அல்லது 4 சீட்டு கேட்டு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படை யில் நான் அதை செய்ய வில்லை. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க ஒருவர் தேவை. அதற்கு ராகுல்காந்தி பொருத்தமானவர் என்று நான் நினைக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here