கடப்பிதழின் செல்லுபடியாகும் காலத்தை 10 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து ஆய்வு -உள்துறை அமைச்சர்

புத்ராஜெயா:

லேசியக் கடப்பிதழின் செல்லுபடியாகும் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பில் தமது துறை நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.

தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல ஆசியான் நாடுகளில் நடைமுறைக்கு ஏற்ப, கடப்பிதழின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதாகவும், இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சு முழுமையாக ஆய்வு செய்து முடித்தவுடன் முடிவு எடுக்கப்படும் என்றார்.

“இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் இந்தக் கொள்கையை அமல்படுத்தியுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதைய மலேசிய கடப்பிதழ் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here