பணியிடத்தில் ஏற்படும் உளவியல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 10,000 பேருக்கு நிதி உதவி- மனிதவள அமைச்சு

கோலாலம்பூர்:

ணியிடத்தில் ஏற்படும் உளவியல் துன்புறுத்தல்கள் அல்லது தாக்கங்களைச் சிறப்பாக எதிர்த்துப் போராட, மனிதவள அமைச்சகம் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொழில் மனநல முதலுதவி (OMHFA) திட்டத்தின் மூலம் முதலில் 10,000 பங்கேற்பாளர்களுக்கு நிதியுதவி செய்யுவுள்ளது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் ஊழியர்களுக்கு மனநல முதலுதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

“பொதுத் துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 10,000 பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சகம் RM12 மில்லியனை ஒதுக்கியுள்ளது” என்று அவர் இன்று (பிப்ரவரி 19) கூறினார்.

NIOSH உருவாக்கியுள்ள இந்த திட்டத்தில் பங்கேற்பாளர்கள் நாடு முழுவதும் உள்ள ஆறு NIOSH அலுவலகங்களில் ஒன்றில் அவர்கள் பயிற்சி பெறுவார்கள் என்றார்.

“உலக சுகாதார அமைப்பு (WHO) குறிப்பிட்டதுபோல, ஒரு நபர் தொடர்ந்து வேலை செய்ய மன நலம் மற்றும் உடல் நலம் மிக முக்கியம் எனக் கூறிய ஸ்டீவன், நாட்டில் மனநலப் பிரச்சினைகளுக்கு  ஆளாவோரின் எண்ணிக்கை கடுமையாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும் இத்திட்அத்திந் தொடக்க தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் அது இந்த வருடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here