இவள் அபராஜிதா என்ற பெயர் பெற்றவள். அபராஜிதா என்றால் ‘யாராலும் வெல்ல முடியாதது’ என்று பொருள்.
பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்த நேரத்திலும் துன்பம் என்று அவளை சரணடைந்ததால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நம் துன்பங்களை தவிடு பொடி ஆக்கி, நம்மை எல்லையில்லா மகிழ்ச்சிக்கு கொண்டு செல்வாள்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜை, தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை பிரத்தியங்கிரா தேவியை வழிபடக்கூடிய நேரம் ஆகும்.
ஒவ்வொரு மாத அமாவாசை அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் மூட்டை மூட்டையாக மிளகாயை யாகத்தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றன.
தேவியின் சக்தியை காட்டும் விதமாக தீயில் போடப்படும் காய்ந்த மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவது இல்லை. எவருடைய கண்களுக்கும் எரிச்சல் ஏற்படாத அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காணமுடியாது. கைமேல் பலன் தருவாள்.
மும்மூர்த்தி மனைவிகளான பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற மூவரும் ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய வடிவமே பிரத்தியங்கிரா என்று புராணங்கள் கூறுகின்றது.