‘மாஸ்டர்’ மம்முட்டி படத்தின் காப்பியா ?;மாட்டிய லோகேஷ் கனகராஜ்!

சென்னை :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம், மலையாள நடிகர் மம்முட்டி நடித்த ஒரு படத்தின் காப்பி என ரசிகர்கள் வைரலாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உலக சினிமாக்களையும் வேற்று மொழி படங்களையும் கதையையும் காட்சியையும் மாற்றி எடுத்தோ அல்லது அப்படியே காப்பி அடித்து படமாக்குவதோ அவ்வப்போது நடக்கும். முறையான அறிவிப்பின்றியோ உரிய அனுமதி இல்லாமலோ இப்படி படமாக்கப்படும் கதைகள் சர்ச்சையை ஏற்படுத்துவதுண்டு. அப்படித்தான் விஜயின் ‘மாஸ்டர்’ படம் மீதும் சலசலப்பு எழுந்திருக்கிறது.

’மாநகரம்’, ‘கைதி’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயுடன் ‘மாஸ்டர்’ படம் மூலமாக முதன் முறையாக இணைந்தார். இந்தக் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களையேப் பெற்றது. இருந்தாலும் வசூலில் இந்தப் படம் ஹிட்டடித்தது. இப்படியான சூழ்நிலையில்தான் விஜய்-லோகேஷ் கூட்டணி ‘லியோ’ படம் மூலம் மீண்டும் இணைந்தது. இந்தப் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியது.

இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் ‘இறுதிப்போர்’ புத்தக வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட லோகேஷிடம் ‘லியோ2’ உருவாவதற்கான வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது எனவும், தற்போது ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தின் திரைக்கதை பணியில் பிஸியாக இருப்பதாகவும் கூறினார்.

இப்படியான சூழலில்தான் நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ படம் 1989ம் ஆண்டு நடிகர் மம்முட்டி நடித்த ‘முத்ரா’ படத்தின் காப்பி என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ‘முத்ரா’ படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள், ஜெயிலில் சிறுவர்கள் இருக்கும் காட்சி, ஜெயிலுக்குள் தன்னுடைய சக அதிகாரிகளை அடிக்கும் காட்சி என பல காட்சிகள் ’மாஸ்டர்’ படத்திலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு படத்தின் காட்சிகளை வீடியோவாக இணைத்து, ’லோகேஷ் கனகராஜ் ஏன் இப்படி காப்பி அடிக்க வேண்டும்’, ‘இந்தப் படத்தின் காப்பிதான் ‘மாஸ்டர்’ படமா?’ எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here