மேலவைத் தலைவராக முதாங் தகால் நியமனம்

கோலாலம்பூர்:

மேலவையில் 20வது தலைவராக சரவாக்கின் புக்கிட் மாஸ் முன்னாள் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் டத்தோ முதாங் தகால் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபர், கடந்த ஜனவரி 26 அன்று சரவாக் ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக முதாங் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், அந்தப் பதவிக்கான வேட்பாளரான முதாங்கைப் பரிந்துரைத்தார்.

“இவர் சரவாக் பகுதியைச் சேர்ந்தவர், அத்துடன் லுன் பவாங் இனக்குழுவைச் சேர்ந்தவர். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம், ஏனினில் லுன் பவாங் இனத்திலிருந்து இந்தப் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here