போலீசாரின் சோதனைக்கு இணங்க தவறிய இரு பெண்கள் கைது

சுபாங் ஜெயா: பிப்ரவரி 23 அன்று போலீஸ் சோதனைக்கு இணங்கத் தவறிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (பிப். 25) ஒரு அறிக்கையில், சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட், பிப்ரவரி 23 அன்று இரவு 11.30 மணியளவில் ஜாலான் SS15/4G இல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு ஒரு காரைக் கண்டதையடுத்து இரண்டு பெண்களும் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.

அங்கிருந்த போலீசார் வாகனத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி, உள்ளே இருந்த இரண்டு பெண்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். தங்கள் கார்டுகளைக் காட்டும்போது தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகப்படுத்திய பிறகு, அவர்கள் இரு பெண்களையும் தங்கள் MyKadஐ ஒப்படைக்கச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் அதைச் செய்ய மறுத்துவிட்டனர்.

இருவரில் ஒருவர் வீடியோ பதிவு செய்வதற்காக தொலைபேசியை எடுத்தார். அதே நேரத்தில் பணி குறித்தும் விமர்சித்ததாக அவர் கூறினார். அதன்பின்னர், பொது ஊழியரின் பணியை செய்யவிடாமல் தடுத்ததற்காக தண்டனைச் சட்டம் 186ஆவது பிரிவின் கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனர். முறையே 29 மற்றும் 37 வயதுடைய இருவரும் பின்னர் இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏசிபி வான் அஸ்லான்  “ஆத்திரமூட்டல்களை ஏற்படுத்தாமல்” போலீசாருடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here